யுக்திய நடவடிக்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் விசேட அறிவிப்பு
விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீதி நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், போதைப்பொருள் சமூகத்தின் அழுத்தமான பிரச்சினையாக இருந்தாலும், அது மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை நியாயமான விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான நீதி நடவடிக்கையின் கீழ் அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சில சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 897 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் 27ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.