மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்யும் ஐநா மனித உரிமைகள் ஆணையர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஐந்து நாள் விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த விஜயம் அமைந்துள்ளது.
காசாவில் உள்ள மோதலைத் தீர்ப்பதில் அவர் கவனம் செலுத்துவார் எனவும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் நடந்த போரை ‘படுகொலைகள், முடிவில்லா துன்பங்கள், அழிவு, கோபம் மற்றும் விரக்தியின் ஒரு முழு மாதம்’ என்று விவரித்த அவர், அந்த வலியிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிப்பதில் மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
அவர் தனது ஐந்து நாள் பயணத்தைத் தொடங்க கெய்ரோவுக்கு வந்துள்ளார்.
மேலும் வியாழன் அன்று ஜோர்டானிய தலைநகர் அம்மானுக்குச் செல்வதற்கு முன் காசா பகுதியின் எல்லையில் உள்ள ரஃபாவை புதன்கிழமை பார்வையிடுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.