இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா நிபுணர்
அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் இம்ரான் கானின் தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து ஐ.நா. நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை(Pakistan) எச்சரித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) தடுப்புக்காவல் நிலைமைகளை அவசரமாக மேம்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார்.
சிறையில் அவர் சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ்(Alice Jill Edwards) கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ், கானின் தடுப்புக்காவல் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், கான் நீண்டகால தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வெளி உலகத்தை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 23 மணிநேரம் வரை அவரது அறையில் தனியாகச் செலவிடுவதாகவும் நம்பகமான தகவல் தனக்குக் கிடைத்ததாக எட்வர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.




