வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு ஐ.நா கண்டனம்
வெனிசுலாவில்(Venezuela) அமெரிக்கத்(America) தலையீடு என்பது உலகைப் பாதுகாப்பற்றதாக மாற்றும் சர்வதேச சட்ட மீறல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) அமெரிக்கப் படைகள் கடந்த வாரம் ஒரு திடீர் நடவடிக்கையில் பதவி நீக்கம் செய்தன.
அவர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் உட்பட அமெரிக்காவில் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் மதுரோவின் துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், “இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது என்பது தெளிவாகிறது, எந்த ஒரு நாடும் பிற நாட்டின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தவோ அல்லது பலத்தைப் பயன்படுத்தவோ கூடாது” என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.
“சர்வதேச சமூகம் இதற்கு எதிராக ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும்” என்று அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெனிசுலாவின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ரவினா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.





