ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான நீடித்த தடையை நீக்குமாறு ஐ.நா கோரிக்கை!

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான நீடித்த தடையை உடனடியாக நீக்குமாறு ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்களை ஐ.நா. குழந்தைகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வி உரிமையை இழந்த மில்லியன் கணக்கான மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், யுனிசெப்பின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.
இந்தத் தடையால் , 400,000 பெண்களின் கல்வி உரிமையை இழந்துள்ளதாகவும், மொத்தம் 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் இடைநிலை மற்றும் உயர்கல்வியைத் தடை செய்யும் உலகின் ஒரே நாடாகும்.
(Visited 1 times, 1 visits today)