ஐ.நாவின் குற்றச்சாட்டு – இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல்!
இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துல்கரேம் (Tulkarem), நூர் ஷாம்ஸ் (Nur Shams) மற்றும் ஜெனின் (Jenin) ஆகிய மூன்று அகதி முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது
இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) , நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) உள்ளிட்ட உயர் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி வழக்குத் தொடர வேண்டும் என்று அவ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் இராணுவ நோக்கத்தை அடைய முகாம்களின் முழு மக்களையும் ஏன் வெளியேற்ற வேண்டியிருந்தது என்பதற்கான எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை என்றும், பாலஸ்தீனியர்கள் திரும்ப அனுமதிக்காததற்கான காரணங்களையும் வழங்கவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகாம்களுக்குள் மீண்டும் நுழைய முயன்ற குடியிருப்பாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இன்னும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, துருப்புக்கள் “வீடுகளைத் தாக்கி, சொத்துக்களை சூறையாடி, குடியிருப்பாளர்களை வெளியேற்றியதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




