உக்ரைனில் தனது மனிதாபிமான வாகன தொடரணியை ரஷ்யா தாக்கியதாக ஐ.நா குற்றச்சாட்டு
தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு முன்னணிப் பகுதிக்கு உதவிகளை வழங்கும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வாகனத் தொடரணி ரஷ்ய ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக உக்ரைனில் உள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் மத்தியாஸ் ஷ்மலே (Matthias Schmale), தாக்குதலைக் கண்டித்து, உலக உணவுத் திட்டத்தின் இரண்டு லாரிகள் ட்ரோன்களால் தாக்கப்பட்டு சேதமடைந்தன, ஆனால் யாரும் காயமடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல் என்றும் அது ஒரு போர்க்குற்றமாக இருக்கலாம் என்றும் மத்தியாஸ் ஷ்மலே தெரிவித்துள்ளார்.





