ரயில் தண்டவாளங்களை தாக்கிய உக்ரைன் படையினர் – மூன்று பேர் பலி!

உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள ரயில் பாதைகளில் இந்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகில் ஒரு டீசல் என்ஜின் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் காலியான எரிபொருள் தொட்டிகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலும் தடம் புரண்டுள்ளது.
இதில் வெடிகுண்டை அகற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய காவலரின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ரயில் போக்குவரத்தை சீர்குலைக்கும் “தனித்துவமான சிக்கலான” நடவடிக்கைக்கு அவர்கள் பின்னணியில் இருந்ததாக உக்ரேனிய இராணுவ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)