உக்ரைன் அகதிக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

கடந்த ஆண்டு உக்ரைனில் இருந்து பெல்ஜியத்திற்கு குடிபெயர்ந்த உக்ரைன் பிரஜை ஒருவருக்கு லாட்டரி அடித்துள்ளது.
5 யூரோக்களுக்கு வாங்கிய லாட்டரி சீட்டில் இருந்து 500,000 யூரோக்கள் ரொக்கப் பரிசை அவரால் பெற முடிந்ததாக பெல்ஜிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில், இந்த இளைஞன் சோகமும் மகிழ்ச்சியும் கலந்ததாக உணர்கின்றேன், என்றார். அவர்களின் தாய்நாடு தற்போது எதிர்கொண்டுள்ள யுத்த சூழ்நிலையே இதற்குக் காரணம்.
தான் வென்ற பணத்தை போரினால் இடம்பெயர்ந்த தனது நாட்டு மக்களுக்கு வழங்க உள்ளதாக இந்த உக்ரைன் இளைஞர் தெரிவித்துள்ளார். லாட்டரியை வெல்லும் நபர்களின் அடையாளத்தை பாதுகாக்க விரும்புவதால், பெல்ஜிய அதிகாரிகள் அவரது தகவலை வெளியிடவில்லை.
(Visited 17 times, 1 visits today)