உக்ரேனிய அதிபர் ஒரு ‘சர்வாதிகாரி’ – ஜெலன்ஸ்கியை தாக்கி பேசிய ட்ரம்ப்

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கிப் பேசியதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
உக்ரேன் போர் தொடர்பில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரேன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
அதனையடுத்து, மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பொய்த் தகவல்கள் நிறைந்த உலகில் டிரம்ப் வாழ்வதாக ஸெலென்ஸ்கி சாடினார். அதற்குப் பதிலடியாக, முன்னைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தனது உத்தரவுகளுக்கெல்லாம் இணங்கச் செய்வதில்தான் ஸெலென்ஸ்கி கைதேர்ந்தவர் என்று திரு டிரம்ப் தாக்கிப் பேசினார்.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் ஃபுளோரிடா மாநிலத்தில் நடந்த முதலீடு தொடர்பான சந்திப்பில் டிரம்ப் அவ்வாறு சொன்னார்.
ஸெலென்ஸ்கியை சர்வாதிகாரி என்று தாக்கிப் பேசியதற்கு எதிராக ஐரோப்பியத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.