உக்ரைன் போர் வீரரின் கோல்ப் மட்டையை டிரம்பிற்கு பரிசளித்த உக்ரைன் ஜனாதிபதி

வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு கோல்ஃப் கோல்ஃப் மட்டையை வழங்கியுள்ளார்.
அது ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் ஒரு படைவீரருக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தீவிர கோல்ஃப் வீரரான டிரம்ப், பரிசை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக ஜெலென்ஸ்கிக்கு வெள்ளை மாளிகையின் குறியீட்டு சாவிகளை வழங்கினார் என்று உக்ரைன் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மட்டை முன்பு கோஸ்டியான்டின் கர்தவ்ட்சேவுக்கு சொந்தமானது. அவர் “ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதல் மாதங்களில் தனது சகோதரர்களைக் காப்பாற்றும் போது ஒரு காலை இழந்த உக்ரேனிய சிப்பாய்” என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)