மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய அதிர்ச்சி தாக்குதல் – மூடப்பட்ட விமான நிலையங்கள்
மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய ட்ரோன்கள், நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
நகரத்திற்குள் நுழையும் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் அவற்றின் சில இடிபாடுகள் விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மேயர் கூறினார்.
இருப்பினும், இந்த விஷயத்தில் உக்ரைன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், ஒரே இரவில் 26 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 33 times, 1 visits today)





