உக்ரைனின் உள்ள Harry Potter Castle கட்டிடத்தை தாக்கி அழித்த ரஷ்யா
உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரத்தில் உள்ள Harry Potter Castle என்ற புகழ்பெற்ற கட்டிடம் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் முப்பத்திரண்டு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு நாய் கொல்லப்பட்டது மற்றும் 28 காயமடைந்தவர்களில் குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர் உறுதிப்படுத்தினார்.
தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் சிர்ஹி கிவாலாவின் வீடு Harry Potter Castle என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எம்.பி நடத்தும் ஒடெசா லா அகாடமியும் அங்கு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி காணொளியில் வெளியிட்டு, இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் உக்ரைனை அழிக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.