உக்ரைன் ராணுவ தளபதி பதவி நீக்கம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி, அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் வலேரி சலுஷ்னியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
உக்ரைன் அதிபருக்கும், அந்நாட்டு ராணுவ தளபதிக்கும் இடையே சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்த நாளில் இருந்து ஜெனரல் சலுஷ்னி உக்ரேனிய இராணுவத்தை வழிநடத்தினார்.
எனினும், உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியை ஜனாதிபதி ஸ்லெனெஸ்கி நியமித்துள்ளார்.
எவ்வாறாயினும், உக்ரைன் படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து உக்ரைன் இராணுவத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக முன்னாள் இராணுவத் தளபதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 17 times, 1 visits today)