ஐரோப்பா

உக்ரைன் போரால் அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

உக்ரைனில் நடந்த போர் அண்டை நாடுகளுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் ஒரு அரசியல் நிகழ்வு அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் பதிவாகியுள்ளது.

யூகோஸ்லாவியாவின் முன்னாள் குடியரசான ஸ்லோவாக்கியாவில் நடந்த பொதுத் தேர்தலில் ரஷ்ய சார்பு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்லோவாக்கியாவில் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து அதன் தலைவர் ரொபர்ட் ஃபிகோ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்லோவாக்கியாவின் தற்போதைய அரசாங்கம் உக்ரைனுக்கு போர் உதவிகளை வழங்கினாலும், ராபர்ட் ஃபிகோ அதை நிராகரிக்கிறார்.

அதன்படி, ஹங்கேரியைப் போன்று புதிய ஸ்லோவாக்கிய அரசும் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்க மறுக்கலாம் என்று கூறப்படுகிறது. உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராபர்ட் ஃபிகோ கூறுகிறார்.

நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஸ்லோவாக்கியா, உக்ரைனில் போரை ஆதரிக்கிறது, ஆனால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரஷ்யாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மேற்கு நாடுகளின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!