தீவிரமடையும் போர்! லைமன் நகரில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் 8 பேர் பலி
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லைமன் நகரில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் தென்கிழக்கு ஜபோரிஜியா பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய தாக்குதல், தொடர்கிறது.
ரஷ்யா அதன் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சிறிய நகரமான லைமன் டொனெட்ஸ்கில் ஒரு முக்கிய ரயில் மையமாக உள்ளது, ஆரம்பத்தில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது ஆனால் அக்டோபரில் உக்ரைனின் இராணுவத்தால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
ரஷ்யா அங்கு “மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை குவித்து வருகிறது” என்று உக்ரைனின் கிழக்குப் படைகளின் செய்தித் தொடர்பாளர் Serhiy Cherevatyy வெள்ளிக்கிழமை உக்ரேனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
“சுமார் 10:00 மணியளவில், ரஷ்யர்கள் பல ராக்கெட் ஏவுகணைகள் மூலம் நகரத்தைத் தாக்கினர்” என்று டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ சனிக்கிழமை சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.