ரஷ்யா மீது அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்
ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.
ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது. ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது.
ஜனவரி 20ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார். அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்றுடன் உக்ரைன் – ரஷியா போர் ஆரம்பித்து 1000 நாட்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி முதல்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் தயாரான நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷியா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ரஷியா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை ராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.