உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணையும் : இத்தாலி வெளியுறவு அமைச்சர்
போர் முடிவடைந்தவுடன் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணையும் என்று இத்தாலி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உக்ரைன் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டிருக்கும் போது அது இராணுவ கூட்டணியில் நுழைய முடியாது என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிற்கான செய்தி மிகவும் தெளிவாக உள்ளது . உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக இருக்க நாங்கள் வேலை செய்கிறோம்” என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் தஜானி கூறியுள்ளார்.
“நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”, ஏனெனில் ரஷ்யாவுடன் போரில் முழு நேட்டோ உறுப்பினர் இருப்பது “மூன்றாம் உலகப் போரைக் குறிக்கிறது” என்று தஜானி கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)