கருங்கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை குறிவைத்து தாக்கிய உக்ரைன்!
ரஷ்யாவின் ‘நிழல் கடற்படையின்’ ஒரு பகுதியாக இருக்கும் கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பலை சேதப்படுத்தியதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
கடற்படை ட்ரோன்களை பயன்படுத்தி இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
டாஷன் (Dashan) என அழைக்கப்படும் குறித்த கப்பல் ரஷ்ய நோவோரோசிஸ்க் (Novorossiysk ) துறைமுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் மதிப்பு சுமார் 30 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொஸ்கோவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
ரஷ்யாவின் பெட்ரோடாலர் (petrodollar) வருவாயைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.





