ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்களை குறிவைத்த உக்ரைன் : அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை!
ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ரஷ்யாவில் விமான நிலையங்கள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி, கசான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்காலிகத் தடையையும், நாட்டின் தென்மேற்கில் உள்ள சரடோவ் நகரில் உள்ள ககாரின் விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளையும் அறிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசான் உக்ரேனிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து 600 மைல்கள் தொலைவில் உள்ளது. சரடோவ் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)