ஐரோப்பா

ஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்யா மேற்கொண்ட தொடர்ச்சியா டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகரை நோக்கிவந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ள கீவ்வின் மேயர் மேலும் பல ஆளில்லா விமானங்கள் தலைநகர் நோக்கி வருகின்றன என எச்சரித்துள்ளார்.

ரஸ்யா ஈரானில் தயாரிக்கப்பட்ட 54 சஹெட்ஆளில்லா விமானங்களை அனுப்பியது அவற்றில் 52 ஆளில்லா விமானங்களை வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிவ் உட்பட பல நகரங்களில் உள்ள இராணுவகட்டமைப்புகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது எதிரி நள்ளிரவு தாக்குதலை மேற்கொண்டான் இதற்காக பயன்படுத்தப்பட்ட அனேகமான ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்