உக்ரைன் – ரஷ்ய போர் : புட்டின் இன்றி ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை!

உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் இன்று (15.05) துருக்கியின் இஸ்தான்புல்லில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இரு தலைவர்களுக்கும் இடையே நேரடி சந்திப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த போதிலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்றைய பேச்சுவார்தையில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
30 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா ஒத்துக்கொள்ள வேண்டும் என மேற்கத்தேய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வாறு இல்லையென்றால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2022 இல் உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் இஸ்தான்புல் அறிக்கையை உருவாக்கினர் – இது ரஷ்யாவின் புதிய முழு அளவிலான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான சமாதான ஒப்பந்தத்தின் கட்டமைப்பாகும்.
(Visited 3 times, 1 visits today)