ஆசியா

போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொது இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் சீனாவால் ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீனாவுக்கு சென்றுள்ளார். ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த பின் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி முதன்முறையாக சீனா சென்றுள்ளார்.

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைன- ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது,

இந்த நிலையில் ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

“நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கி செல்வது எங்களுக்கு அவசியம். சீனா இதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும்” என்றார்.

ஒருமித்த கருத்தோடு, இணைந்து அரசியல் நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தினருக்கு சீனா உதவி செய்யும் என சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!