ரஷ்ய எண்ணெய் முனையம், வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உள்ள ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது.
உக்ரைன் ட்ரோன் மூலம் கிரிமியாவில் உள்ள எண்ணெய் முனையத்தைத் தாக்கியதாகவும், கிரிமியா உள்பட 14 மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
251 ட்ரோன்கள் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷ்யா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)