தோல்வி அடையும் அபாயத்தில் உக்ரைன்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வி அடையும் அபாயம் இருப்பதாக பிரித்தானிய கூட்டுத் தளபத்தியத்தின் முன்னாள் தலைமைத் தளபதி கூறியிருக்கிறார்.
ஜெனரல் சர் ரிச்சர்ட் பேரன்ஸ் வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் பிறகு உக்ரைனிய வீரர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் என அவர் கூறினார்.
இன்னமும் அந்த நிலை வரவில்லை என்றாலும் இப்போதைக்கு ரஷ்யாவின் கரம் மிகவும் ஓங்கியுள்ளது. ஆயுதம், படைபலம், போர் உத்தி ஆகியவை ரஷ்யாவுக்குச் சாதகமாக உள்ளன.
ஐந்துக்கு ஒன்று என்ற அளவில் படைகளைக் குவித்து எல்லையில் ரஷ்யா தாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய-உக்ரேன் எல்லை 2,300 கிலோமீட்டர் தூரம் கொண்டது. எனவே எங்கே தாக்குதல் வரும் என்று ஊகித்துத் தற்காப்பது உக்ரேனுக்குச் சிரமம் என்று ஜெனரல் பேரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.