ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அழைப்பு விடுத்த உக்ரைன்
Kyiv ஆல் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் Kursk பகுதியில் உள்ள பகுதிகளில் நிலைமையை சரிபார்க்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை (ICRC) கேட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் Andrii Sybiha , அமைப்புகளுக்கு முறையான அழைப்புகளை வழங்குமாறு தனது அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
இந்த அழைப்பு “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுவதை நிரூபிப்பதாக” அவர் தெரிவித்தார்.
இந்த அழைப்பிற்கு UN அல்லது ICRC பதிலளித்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
உக்ரைனின் எல்லையில் தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில் சுமார் 100 குடியேற்றங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது.





