மத்திய ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் மூவர் பலி

எல்லையிலிருந்து 1,000 கி.மீ (620 மைல்) தொலைவில் உள்ள இஷெவ்ஸ்க் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் ஆறு பேர் பலத்த காயமடைந்ததாக உத்முர்டியா ஆளுநர் அலெக்சாண்டர் பிரெச்சலோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு விளக்கமளித்ததாகவும் பின்னர் இப்பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
டோர் தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் மற்றும் ரேடார் நிலையங்களை உற்பத்தி செய்வதாகக் கூறப்படும் ஒரு இராணுவ தொழிற்சாலையான குபோல் எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலை ஓசா வான் பாதுகாப்பு அமைப்புகளை தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது என்று உக்ரைனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.