மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைன் – விமானக் கட்டுப்பாடுகளை அறிவித்த ரஷ்யா!

ரஷ்ய படைகள் 126 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது, தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் குறைந்தது மூன்று விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகுறிது.
ஜூலை 11 அன்று ரஷ்யாவிற்குள் 167 விமானங்களை ஏவியதிலிருந்து இந்த தாக்குதல் உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலாகும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தாக்குதலில் 11 ரஷ்ய பிராந்தியங்களுக்கு மேல் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு கிரிமியாவை இணைத்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் கூட்டாட்சி விமான நிறுவனமான ரோசாவியாட்சியாவின் செய்தித் தொடர்பாளர் ஆர்டெம் கொரென்யாகோவின் டெலிகிராம் பதிவுகளின்படி, மாஸ்கோவின் வுனுகோவோ விமான நிலையம், தலைநகரின் தென்மேற்கில் உள்ள கலுகா கிராப்ட்செவோ விமான நிலையம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையம் ஆகியவற்றில் தற்காலிக விமானக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.