ரஷ்ய தேர்தலை சீர்குலைக்க உக்ரேன் முயற்சி
ரஷ்யத் தேர்தலைச் சீர்குலைக்க உக்ரேன் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மொஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் மூன்று நாள்களாக நடைபெறும் வாக்களிப்பு இன்று நிறைவுபெறும்.
ரஷ்யாவின் எல்லையில் உள்ள Belgorod நகரில் உக்ரேன் நடத்திய தாக்குதல் காரணமாக அங்குள்ள பள்ளிக்கூடமும், கடைத்தொகுதிகளும் மூடப்பட்டன.
சமரா வட்டாரத்தில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையின் மீதும் உக்ரேன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தேர்தலைச் சீர்குலைக்க உக்ரேன் முயல்வதாகக் கூறினார்.
ரஷ்யத் தேர்தலில் மக்கள் பெரிய அளவில் வாக்களிப்பதாகக் கூறப்படுகிறது. 2 நாள்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட உக்ரேனிய வட்டாரங்களிலும் தேர்தல் நடக்கிறது. அங்கு சுமார் 70 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
புட்டின் வெற்றிபெற்றால் மேலும் 6 ஆண்டுக்காலம் அவர் பதவியில் இருப்பார். சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலினைவிட அதிகக் காலம் ஆட்சியில் இருந்த அதிபராக அவர் விளங்குவார்.