ஐரோப்பா

பெர்டியன்ஸ்கில் உள்ள துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் – 9 பேர் காயம்!

பெர்டியன்ஸ்கில் உள்ள ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட துறைமுகத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் உள்ள அசோவ் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரம் இன்று (02) நண்பகலில் குறிவைக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி  விளாடிமிர் ரோகோவ் கூறினார்.

இந்த தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியாவில் “வி ஆர் டுகெதர் வித் ரஷ்யா” என்ற மாஸ்கோ சார்பு அமைப்பை வழிநடத்தும்  ரோகோவ், துறைமுகப் பகுதிக்கு அருகில் இருந்து சாம்பல் புகை வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

வீடியோவின் இடம் பெர்டியன்ஸ்க் என அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால் காட்சிகளின் திகதியை சரிபார்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!