இலங்கை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அரச சேவையில் இருந்த தமிழர் ஒருவரின் படு மோசமான செயல்!

பிரித்தானியாவில் 12 வயதான சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் தேசிய சுகாதார சேவையின் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இப்ஸ்விச்சில் ( Ipswich) உள்ள தேசிய சுகாதார சேவையில் ரேடியோகிராஃபராக (radiographer) பணியாற்றிய வினோத் ராமச்சந்திரன் என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் மீண்டும் ஒரு ரேடியோகிராஃபராகப் (radiographer) பணிபுரிவதைத் தடுத்து, அவரது பெயரை தொழில்முறை பதிவேட்டில் இருந்து நீக்க சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் தொழில்கள் தீர்ப்பாயம் சேவை முடிவு செய்துள்ளது.

42 வயதான ராமச்சந்திரன், பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் கணக்குக்கு தொடங்கி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாட்ஸ் அப்பில் அவர்களின் உரையாடல்களை ‘பெருகிய முறையில் பாலியல் ரீதியாக’ மாற்றினார்.

அவர் அந்த முகநூல் கணக்கை வைத்திருந்ததாக நம்பிய 12 வயது சிறுமிக்கு ‘கவர்ச்சியான உருவம்’ இருப்பதாக கூறி மோசமான பாலியல் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இருவரும் சந்திக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று தனது விருப்பதையும் மிக மோசமாக விபரித்துள்ளார். மேலும் பொலிசாரிடம் சொல்ல வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமச்சந்திரன் நிகழ்நிலையில் ஆபாசத்தைப் படத்தை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஆண்குறி போன்ற வடிவிலான படங்களையும் அனுப்பியுள்ளார்.

நார்விச்சில் உள்ள ஒரு மேல்நிலைப் பாடசாலைக்கு அருகில் சிறுமியை சந்திக்கச் சென்ற போது, பேஸ்புக் கணக்கை நிர்வகித்த உண்மையான நபர்கள் வினோத் ராமச்சந்திரனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு, குழந்தையுடன் பாலியல் தொடர்பு கொள்ள முயற்சித்ததற்காகவும், குழந்தையை ஆபாசப் படங்களைப் பார்க்க வைத்ததற்காகவும், குழந்தை பாலியல் செயலைச் செய்ய உத்தரவிட்டதற்காகவும், பாலியல் சீர்ப்படுத்தலுக்குப் பின்னர் குழந்தையைச் சந்திக்க முயன்றதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் நார்விச் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, நார்விச் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டார்.
அவருக்கு 24 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!