ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கடன் வழங்குபவர்களிடையே போட்டி – அடமான விகிதங்கள் குறைய வாய்ப்பு

கடன் வழங்குபவர்களிடையே அதிக போட்டி நிலவுவதால், எதிர்வரும் வாரங்களில் அடமான விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என தரகர்கள் (Brokers) மற்றும் நிதி ஆய்வாளர்கள் (Analysts) தெரிவித்துள்ளனர்.

நிதி தகவல் சேவை நிறுவனமான மணிஃபேக்ட்ஸ் (Moneyfacts) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2026 ஆம் ஆண்டில் அடமான சந்தை (Mortgage Market)
செழிப்படையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

அடமானப் பொருட்களின் (Mortgage Products) தேர்வு தற்போது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு இப்போது கடன் பெறுவது சற்று எளிதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அடமான விகிதங்கள் (Mortgage Rates) குறைந்துள்ளன.

ஆனால், உலகளாவிய மற்றும் பொருளாதார (Economic) நிச்சயமற்ற நிலை காரணமாக, இந்த முன்னேற்றங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில கடன் வாங்குபவர்கள் , தங்களின் தற்போதைய ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்போது, இன்னும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.

தற்போது, 10 அடமான வாடிக்கையாளர்களில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள்,நிலையான விகித ஒப்பந்தங்கள் வைத்துள்ளனர்.

இந்த வகை அடமானத்தில், வட்டி விகிதம் ஒப்பந்தம் காலாவதியாகும் வரை மாற்றமின்றி இருக்கும்,
பொதுவாக 2 அல்லது 5 ஆண்டுகள் ஆகும்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!