பிரிட்டன் நிதியுதவி குறைப்பு திட்டம் -முன்னுரிமை நாடுகள் பாதுகாப்பு, மற்றவர்களுக்கு கடும் பாதிப்பு
வெளிநாட்டு உதவி நிதியை குறைக்கும் திட்டத்தில், “மிகப்பெரிய நெருக்கடி மற்றும் மோதல்” நிலவும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) தெரிவித்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போது,”உக்ரைன், பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கான உதவி நிதி அடுத்த ஆண்டும் முழுமையாக பாதுகாக்கப்படும்” என்று கூறினார்.
இதேவேளை, மொசாம்பிக் மற்றும்
பாகிஸ்தான் போன்ற நாடுகள் நேரடி மானியங்களில் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செலவுகளை அதிகரிப்பதற்காக, 2027 க்குள் வெளிநாட்டு உதவி நிதியில் இருந்து சுமார் £6 பில்லியன் குறைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த முடிவை உதவி அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Sarah Champion (சாரா சாம்பியன்), இந்த “பொறுப்பற்ற” வெட்டுக்கள் உலகளாவிய பாதிப்புகளை அதிகரிக்கும் என்று எச்சரித்தார்.




