ஐரோப்பா செய்தி

தேர்தல் போட்டியில் இருந்து விலகிய ஆளும் கட்சி எம்.பிகள் – பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பெரும் சவால்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 4 அன்று திடீர் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பிறகு, அவரது கன்சர்வேடிவ் கட்சியின் குறைந்தபட்சம் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மறுதேர்தலில் நிற்கப் போவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளனர்.

வெள்ளியன்று,  அமைச்சரவை அமைச்சர்கள் Michael Gove மற்றும் Andrea Leadsom ஆகியோர் கோடைகாலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தங்கள் முடிவை அறிவித்த பின்னர் தேர்தலி போட்டியில் இருந்து வெளியேறும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 78 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் தங்களின் முடிவுகள் அடங்கிய கடதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளதுடன், தேர்தலில் இருந்து விலகியமைக்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் ஏற்கனவே முன்னணி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், மூத்த எம்.பி.க்களில் முன்னாள் பிரதமர் தெரசா மேயும் விலகியுள்ளார்.

இதற்கிடையில்,  தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் பிரதமர் தேர்தல் வியூகம் பற்றி விவாதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய YouGov கருத்துக்கணிப்பில்  தொழில் கட்சி 44 வீத ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகவும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 22 வீத ஆதரவுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!