ஐரோப்பா செய்தி

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் அழைப்பு

கிரனாடா கண்டத்தின் எல்லைகளுக்கு வரும் ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு மேலும் ஒருங்கிணைந்த ஐரோப்பிய நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய பிரதமர் பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு விடுக்கவுள்ளார்.

ஸ்பெயினில் நடைபெறும் ஐரோப்பிய தலைவர்களின் கிரனாடா உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

மனித கடத்தல்காரர்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் எல்லைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிலும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் இணைந்து ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

47 ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத தலைவர்களின் உச்சிமாநாடு என்பது ஐரோப்பிய அரசியல் சமூகம் எனப்படும் புதிய அமைப்பின் கூட்டமாகும், இது கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி