இங்கிலாந்து தேர்தல் திருத்தம்: அரசியல் நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை
இங்கிலாந்தில் ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க, அரசியல் கட்சிகளுக்கான நிதி நன்கொடைகளுக்கு உடனடி உச்சவரம்பு விதிக்க வேண்டும் என 19 சிவில் அமைப்புகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய தேர்தல் மசோதாவில், வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதுடன், அடையாளம் காண முடியாத கிரிப்டோ கரன்சி (Cryptocurrency) நன்கொடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என தேர்தல் சீர்திருத்தக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சிக்குக் கிடைத்த 90 லட்சம் பவுண்டுகள் கிரிப்டோ நன்கொடையைத் தொடர்ந்து இக்கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
“செல்வந்தர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து, வெளிப்படையான தேர்தல் முறையை உறுதி செய்ய இம்மாற்றம் அவசியம்” என அவர்கள் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.





