கேரளா கடற்கரையில் அலை தாக்கியதில் இங்கிலாந்து நபர் மரணம்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வர்கலா கடற்கரையில் 55 வயது வெளிநாட்டு பிரஜை ஒருவர் சர்ஃபிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்தார்.
“யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த ராய், பாடிசர்ஃபிங் முடிந்து கரையில் இருந்தபோது பாரிய அலையால் தாக்கப்பட்டார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
பாடிசர்ஃபிங் என்பது சர்ப்போர்டு போன்ற எந்த மிதக்கும் சாதனத்தின் உதவியும் இல்லாமல் அலையில் சவாரி செய்யும் விளையாட்டாகும்.
“அலை அவரை பின்னால் இருந்து தாக்கியது, இதனால் அவரது தலை தரையில் மோதியது. அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காப்பாற்ற முடியவில்லை,” என்று போலீசார் தெரிவித்தனர்.





