ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு – போர்க்கப்பல்கள் அனுப்புமா பிரித்தானியா?

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் முக்கிய எண்ணெய் கப்பல் பாதைகளை பாதுகாக்க, பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலித்து வருவதாக எரிசக்தி செயலாளர் Ed Miliband (எட் மிலிபாண்ட்) தெரிவித்துள்ளார்.

இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump)சனிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீரிணை மூடப்பட்டால் அதைத் திறப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்ததுடன், பிரித்தானியா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அந்த நீர்வழியை பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இதுகுறித்து BBC க்கு அளித்த பேட்டியில் எட் மிலிபாண்ட், ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக மாற்றுவது மிகவும் முக்கியமானது என்றாலும், அரசாங்கம் பரிசீலிக்கும் திட்டங்களின் விபரங்களை வெளியிட முடியாது என்று கூறினார்.

உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20 சதவீதம் நடைபெறுகிறது.

இந்த நீரிணை பாதை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கும் எரிசக்தி விலைகளுக்கும் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுக்கு எதிரான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தமாக ஹார்முஸ் நீரிணையை தொடர்ந்து தடுப்போம் என்று சபதம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடன் நடைபெறும் போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், குறித்த நீரிணை வழியாகச் செல்ல முயன்ற பல கப்பல்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கப்பல் போக்குவரத்தைத் தடுக்க, அந்தப் பாதையில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருக்கலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!