ஐரோப்பா

பிரித்தானியாவில் வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்!

பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கடுமையான சட்ட விதிகளை கொண்டுவரும்போது வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வகையான ஆயுதங்கள் மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும் என்பதால் பலர் குழந்தைகள் உள்பட பலர் இதில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி குத்து தாக்குதல்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவை மக்களை பீதியடையவைத்துள்ளதுடன், எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

லண்டனில், இத்தகைய குற்றங்கள் 20% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மற்றைய இடங்களிலும் சீரான அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் துப்பாக்கிகள் பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் டன்பிளேனில் 16 தொடக்கப் பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், கைத்துப்பாக்கி வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது.

அதேபோல் கத்திகளை பயன்படுத்துவதையும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கத்தியை விற்பனை செய்வது உள்ளிட்ட பல விடயங்களை அரசாங்கம் கடினமாக்கியுள்ளது.

இருந்தாலும் துப்பாக்கிகளை தடை செய்ததுபோல் கத்திகளை தடை செய்ய முடியாது என்பதால் இந்த விடயத்தில் அரசாங்கம் போராடி வருகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்