பிரித்தானியாவுக்கு போர் அபாயம்? ; ராணுவத் தளபதி எச்சரிக்கை
ஐரோப்பாவில் போர் மூண்டால் நாட்டைப் பாதுகாக்க பிரித்தானியாவிடம் முறையான ‘தேசிய பாதுகாப்புத் திட்டம்’ இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, போர்க்காலங்களில் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேசிய சுகாதார சேவையை (NHS) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான வரைபடங்கள் ஏதுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட ‘அரசு போர் கையேடு’ (Government War Book) போன்ற வழிகாட்டிகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.
நிதிப் பற்றாக்குறையே இந்த பாதுகாப்புத் தொய்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்புத் தரவரிசையில் பிரித்தானியா பின்தங்கியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





