ஹூதிகளை தாக்குவதைத் தவிர இங்கிலாந்துக்கு வேறு வழியில்லை – கேமரூன்
செங்கடலில் தாக்குதல் நடத்தியதற்காக யேமனில் உள்ள ஹூதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர இங்கிலாந்துக்கு “வேறு வழியில்லை” என்று வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.
ஹூதிகள் முக்கியமான வர்த்தக வழிகளைத் தடுத்தால் இங்கிலாந்தில் விலைகள் உயரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவில் நடக்கும் போரில் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக கூறி ஹமாஸ் ஆதரவு குழு செங்கடலில் கப்பல்களை தாக்கி வருகிறது.





