XL புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து தீர்மானம்!
“அமெரிக்கன் XL புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
நாய்கள் மிகவும் கொடூரமானவை என்றும், இதனால் மக்கள் அவதிப்படுவதாகவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக இந்த நாய்கள் கடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த ஆண்டு இறுதியிலிருந்து இங்கிலாந்தில் இந்த இன நாய்களின் இனப்பெருக்கத்தை தடை செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தற்போது இந்த நாய்களை வளர்க்கும் நபர்கள் கடுமையான சட்ட விதிமுறைகளுக்கு மத்தியில் நாய்களை இறக்கும் வரை கவனித்துக் கொள்ளலாம் என்று நாட்டின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார்.