UK – மான்செஸ்டரில் தீவிபத்தால் உயிரிழந்த குழந்தை : பெண் ஒருவர் கைது!

பிரித்தானியா – மான்செஸ்டரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.35 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்lதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் துரதிஷ்ட வசமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் 44 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)