ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்ய அனுமதி

பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழியர்கள் இன்று (16) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடத்தில் உடல் ரீதியாக இருக்க வேண்டிய பதவிகளைத் தவிர, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது.
நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிப்புற வேலைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)