U19 உலகக்கோப்பை இறுதி போட்டி இன்று
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெனோனி நகரில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது..
இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இவ் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.