ஆசியா வட அமெரிக்கா

சீன உயிரியல் ஆய்வகங்களுக்கு டொலர்களை வாரி வழங்கும் அமெரிக்கா!

சீனத்து உயிரியல் ஆய்வகங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இன்னும் பல மில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா வாரி வழங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் வூஹன் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று கசிந்திருக்கலாம் என்ற அச்சம் பரவலாக இருந்துவரும் நிலையில், குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2013ல் மட்டும் ஆபத்தான மற்றும் கொடூரமான ஆய்வுகளுக்காக சீனாவின் 27 உயிரியல் ஆய்வகங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மொத்தம் 15 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இந்த 8 மாதங்களில் செலவிடப்பட்டுள்ளது.மேலும், சீனாவின் மாமிச சந்தைகளில் இருந்து ஆபத்தான பறவைக் காய்ச்சல் வைரஸ்களைச் சேகரிப்பதில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் ஈடுபட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Biden administration suspends funding for Wuhan lab | CNN Politics

ஆனால் சீனாவில் அமெரிக்கா முன்னெடுக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றே தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 முதல் 2023 வரையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் எனப்படும் NIH சீனாவின் முக்கிய ஆய்வகத்திற்கு மொத்தமாக 3.6 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.அத்துடன் சீனத்து பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு என மொத்தம் 12.5 மில்லியன் டொலர் தொகையை NIH இதே காலகட்டத்தில் வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி, 2020 முதல் 29 நாடுகளில் மிருகங்களில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்காக NIH மொத்தம் 140 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

Documents Provide New Evidence U.S. Funded Gain-of-Function Research

மேலும், அமெரிக்காவின் இந்த NIH ரஷ்யாவிலும் உயிரியல் ஆய்வுகளை முன்னெடுக்க நிதியுதவி வழங்கியுள்ளது. 2018 மற்றும் 2020ல் சுமார் 123.550 டொலர்களை ரஷ்ய உயிரியல் ஆய்வகம் ஒன்றிற்கு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் நிதியுதவியாக அளித்துள்ளது.அந்த ஆய்வுகளுக்காக 1.6 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புதலும் அளித்துள்ளது. இதுபோன்று அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சீனா மற்றும் ரஷ்யாவில் பல மில்லியன் டொலர் நிதியுதவி அளித்து உயிரியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.

அமெரிக்காவில் இந்த ஆய்வுகள் முன்னெடுப்பது சட்ட விரோதம் என்பதாலையே, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்