வட அமெரிக்கா

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க வலியுறுத்தும் மசோதா நிறைவேற்றம்

குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஹமாஸ் போராளிக் குழுவுடனான போரில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமாகச் செயல்படுமாறு இஸ்ரேலை பைடன் நெருக்கி வரும் வேளையில் இந்த மசோதா நிறைவேறி உள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு உதவிச் சட்ட மசோதாவை ஆதரித்து 224 வாக்குகளும் எதிர்த்து 187 வாக்குகளும் பதிவாயின. இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

அண்மையில் பைனிடம் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலில், “ராஃபா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்,” என்று கேட்கப்பட்டது.

“அது நிகழ்ந்தால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம்,” என்று அவர் பதிலளித்தார். ஆயுத ஏற்றுமதிதான் அமெரிக்க-இஸ்ரேல் உறவின் அடித்தளமாக இருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் இந்த இஸ்ரேலை ஆதரிக்கும் கொள்கை அமெரிக்க மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமது நாட்டின் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளைத் துடைத்து ஒழிப்பதில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மும்முரமாக ஈடுபட்டு போரைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!