வியட்நாமை சூறையாடிய யாகி புயல் : பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!
யாகி புயலுக்குப் பிறகு வியட்நாமில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்துள்ளனர் மற்றும் 125 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல தசாப்தங்களில் தென்கிழக்கு ஆசிய நாட்டை தாக்கிய வலிமையான சூறாவளி யாக யாகி புயல் கருதப்படுகிறது.
இது சனிக்கிழமையன்று மணிக்கு 92 மைல் (149 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.
வியட்நாமின் VNExpress செய்தித்தாளின்படி, சுமார் 197 பேர் இறந்துள்ளனர் மற்றும் 128 பேர் மாயமாகியுள்ளதாகவும் ஏறக்குறைய 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் முழு குக்கிராமத்தையும் திடீரென வெள்ளம் அடித்துச் சென்றதால், இந்த வார தொடக்கத்தில் இறப்புகள் உச்சத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.