சீனாவை தாக்கிய சூறாவளி : ஐவர் உயிரிழப்பு , பலர் படுகாயம்!

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷான்டாங் நகரில் சூறாவளி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டோங்மிங் மற்றும் ஜுவான்செங் மாவட்டங்கள் உட்பட ஹெஸ் நகரின் சில பகுதிகளை சூறாவளி தாக்கியது.
இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 80இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி தளம் அறிவித்துள்ளது.
2,820 வீடுகள், 48 மின் இணைப்புகள் மற்றும் 4,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
(Visited 11 times, 1 visits today)