ஜப்பானில் தொடரும் சூறாவளி அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானின் தென் மேற்கு வட்டாரத்தில் Shanshan சூறாவளி அபாயம் தொடர்வதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
சூறாவளி வெப்ப மண்டலப் புயலாய் வலுவிழந்திருக்கிறது. இருப்பினும் மழையும், பலத்த காற்றும் ஓயவில்லை. 6 பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்தனர்.
சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் கிடைத்து விட்டது.
ஜப்பானில் ரயில், விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தது. புயல் கிழக்கே தலைநகர் தோக்கியோ நோக்கி மெதுவாக நகர்கிறது.
(Visited 22 times, 1 visits today)